ஆயுஷ் க்வாத்
மருத்துவ குணம்வாய்ந்த மூலிகைகளின் கலவையால் விஞ்ஞானபூர்வமாக ஆய்வுகளுடன் உருவாக்கப்பட்ட ஆயுஷ் க்வாத் பவுடர் மூலம் கடுமையான நோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தியை கூட்டுதல், தொற்று, பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக செயல்படுதல் மற்றும் உடலில் உள்ள மாசுக்களை வெளியேற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்ட் காத்தல் ஆகியவை சாத்தியமாகிறது. ஆயுஷ் க்வாத் பவுடரானது துளசி, லவங்கப்பட்டை, கருமிளகு மற்றும் சுந்தி போன்ற எண்ணற்ற மூலிகைப் பொருள்களைச் சரியான விகிதத்தில் உள்ளடக்கியதாகும். இயற்கை மூலம் கிடைக்கக் கூடிய தினசரி நோய் எதிர்ப்புச் சக்தியாகவே இக்கலவை செயல்படுகிறது.