கபசுர குடிநீர்
கபசுர குடிநீர் என்பது கபம் சம்பந்தமான அதாவது சளி, இருமல், மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை கட்டுப்படுத்துவதற்குக் கொடுக்கப்படும் ஒரு கஷாயம். இந்த கஷாயத்தில் சுக்கு, திப்பிலி, இலவங்கம், ஆடாதொடை,வட்டத்திருப்பி வேர், நில வேம்பு உள்ளிட்ட 15 வகையான மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன. இந்த மூலிகைகள் காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளைக் குணப்படுத்தும் வல்லமை உடையவை.