வேம்பு மாத்திரை
துளசி, வில்வம், அறுகு, வன்னி வரிசையில் வேம்பும் ஓர் அற்புத மூலிகையே. வேப்ப மரத்தின் அனைத்துப் பாகங்களும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தக்கூடியவை. வேப்பமரத்தின் இலை, பூ, காய், பழம் மற்றும் மரப்பட்டை எல்லாமே மருத்துவ குணம் வாய்ந்தவை. தமிழர் வாழ்வில் கலாசார ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் இரண்டறக் கலந்தது வேப்பமரம். வேம்புக்கு இருக்கும் மருத்துவக் குணங்களை இன்று கண்டுபிடித்து உலகமெல்லாம் போற்றுகிறது. ஆனால் அந்தக் காலத்திலேயே அதை தெய்வமாகக் கண்டு வழிபட்டவர்கள் தமிழர்கள்.