நிலவேம்பு குடிநீர்
நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு (கோரைப்புல்லின் கிழங்கு), பேய்ப்புடல் (புடலங்காய் வகைத் தாவரம் ), பற்படாகம் (ஒரு புல் வகையைச் சேர்ந்தது), சுக்கு, மிளகு ஆகியவற்றின் கலவையே நிலவேம்புக் குடிநீர் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களாகும். நிலவேம்புக் குடிநீர் என்பது காய்ச்சலை குணப்படுத்துவதுடன், நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும். மேலும் கல்லீரல் தொடர்பான நோய்கள், பசி மந்தம், சொறி சிரங்கு போன்றவற்றைக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்த ஒரு மூலிகை. தலையில் நீர் கட்டுதல், தலைவலி, தும்மல், இருமல் போன்றவற்றையும் குணப்படுத்தக்கூடியது. தைராய்டு, கர்ப்பப்பைக் கட்டிகளையும் நிலவேம்பு குணப்படுத்தும். நற்பலன்கள் பலவற்றை அடக்கிய மூலிகைச் சேர்மானமே நிலவேம்புக் குடிநீர் ஆகும். சித்த மருத்துவரின் பரிந்துரையுடன் இதை உட்கொள்வது நன்மை பயக்கும். மேலும் விவரங்கள் அறிய