Rose Water
ரோஜா இதழ்களைக்கொண்டு தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டர் (Rose water), பலவகை ஒப்பனை நடைமுறைகளில் பயன்படுத்தப்படுகிறது. ரோஸ் வாட்டரானது தோல் சிவந்துபோதலைக் குறைக்கிறது. சருமத் துளைகளை சுத்தம் செய்து, சருமத்தை பளபளப்பாக்குகிறது. தோல் எரிச்சலைத் தணிக்கிறது. தோல் அமிலத்தன்மையை சீராக்குகிறது. செல் சேதத்தைத் தடுக்க இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. . ஈரப்பதத்தை அளித்து சருமத்தை புத்துயிர் பெறச்செய்கிறது.. சருமம் முதுமை அடைவதைத் தள்ளிப்போடுகிறது. எனவே தான் ரோஸ் வாட்டர் அழகுக்கலையில் முக்கிய இடம்பெறுகிறது.