Iron Box
"அயன் பாக்ஸ்: துணியில் இருக்கும் சுருக்கங்களை நீக்க உதவுவது அயன் பாக்ஸ். லாண்டரி, டிராவல், கார்மென்ட் ஸ்டீமிங், குல்ட்டிங் (Quilting) எனத் தேவைக்கும் பயன்பாட்டுக்கும் ஏற்றாற்போல, பலவிதமாகக் கிடைக்கிறது. டிரை அயன்பாக்ஸுக்கும் ஸ்டீம் அயன்பாக்ஸுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு தண்ணீர் டேங்க். சாதாரண அயன்பாக்ஸ் போல அல்லாமல் ஸ்டீம் ஐயன்பாக்ஸில் நீராவியை வெளிப்படுத்த துவாரங்கள் இருக்கும். அத்துடன் அயன் செய்யும் துணியில் அவ்வப்போது தானாகவே தண்ணீர் தெளிக்கும் விதத்திலும் அது வடிவமைக்கப்பட்டிருக்கும்."