Coffee Makers
நீங்கள் காபி பிரியர் என்றால் நிச்சயம் காபி மேக்கர் உங்களுக்குப் பிடிக்கும். பொதுவாக காபி மேக்கர் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் வகைகளில் கிடைக்கின்றன. ஹாட் ப்ரெஸ் மாடல்கள் பொதுவாக மேனுவல் வகையிலும், துளித்துளியாக சொட்டும் வகையிலான மாடல்கள் ஆட்டோமேட்டிக் வகையிலும் கிடைக்கின்றன. ஃபில்டரைத் தனியாகக் கழட்டும் வசதி, காபியை சூடாக வைத்திருக்க உதவும் வார்மிங் பிளேட், ஆட்டோமேட்டிக் ஆஃப் போன்ற பல்வேறு வசதிகளுடன் பல்வேறு கொள்ளளவிலும் காபி மேக்கர்கள் கிடைக்கின்றன. மாடர்னான மாடுலர் கிச்சன்கள் மட்டுமின்றி, சிறிய அளவிலான அலுவலகங்களிலும் இவ்வகை காபி மேக்கர்கள் அழகு சேர்ப்பதோடு பயனுள்ளதாகவும் இருக்கும்.