Gas Stove
ஒவ்வொரு கிச்சனிலும் முதுகெலும்பே கேஸ் ஸ்டவ் தான். இப்போது வண்ணமயமான டிசைன்களில், ஸ்டீல் பாடி மற்றும் க்ளாஸ் டாப் வகைகளில், இரண்டில் இருந்து நான்கைந்து பர்னர்கள் கொண்ட கேஸ் ஸ்டவ்கள் சந்தையில் கிடைக்கின்றன. பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்ற கேஸ் ஸ்டவ்கள் தான் உங்கள் முதன்மையான தேர்வாக இருக்க வேண்டும். சுருக்கமா சொல்லணும்ன்னா சிலிண்டர் கனெக்ஷன் வாங்கறது மட்டுமல்ல... அதோடு சமையலறைக்கு ஏற்றபடி பொருத்தமான கேஸ் ஸ்டவ் தேர்ந்தெடுப்பதும் பாதுகாப்பான கிச்சனுக்கு அழகு சேர்க்கும்!