Hand Blender
சூப், பிராத், மயோனீஸ், ஆம்லெட், கேக் பேட்டர், விப்பிங் கிரீம் போன்றவற்றைத் தயாரிக்க இனி கை வலிக்க பிளென்ட் செய்யத் தேவையில்லை. ஹான்ட் பிளென்டர் மூலம் உணவுப்பொருட்களை எளிமையாக பிளென்டிங் செய்யலாம். இதைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரே சீராக உணவுப்பொருளைக் கட்டி சேராமல் கலக்க முடியும் என்பது இதன் கூடுதல் பயன். ஸ்டெயின்லஸ் ஸ்டீல் ஷாஃப்ட் உடன் வரும் ஹான்ட் பிளென்டரை சூடான உணவிலும் பயன்படுத்த முடியும்.