Mixer Grinder
இல்லத்தரசிகளின் பொன்னான நேரத்தை சிக்கனப்படுத்தியது மிக்ஸர் கிரைண்டரின் சத்தமான சாதனை. சட்னியில் தொடங்கி, இட்லி மாவு அரைக்க, சமையலுக்குத் தேவையான மசாலாப் பொடிகள் அரைக்க, ஜூஸ் தயாரிக்க, மயோனைஸ், விப்பிங் கிரீம் பிளென்டிங் என மிக்ஸர் கிரைண்டர்களின் பயன்பாடு இன்று அளவிட முடியாததாக இருக்கிறது. சமையலறையில் உடல் உழைப்பையும் நேரத்தையும் கணிசமாகக் குறைத்து இன்று இல்லத்தரசிகளின் அத்தியாவசியமான தேர்வாக மிக்ஸி இருப்பதில் ஆச்சர்யமில்லை.